நாற்காலி சண்டை: மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அவர்களை அதிருப்தியில் ஆழ்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. சுழற்சி முறையில் ஆட்சியை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அதிகார பகிர்வு மோதலால் தேர்தலுக்கு முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது.

 

இதையடுத்து நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிடையே கூட்டணி இறுதியானது. தொடர்ந்து, இக்கட்சிகளுக்கிடையே கூட்டணியை வழிநடத்துவது தொடர்பாக ‘மகாராஷ்டிர வளர்ச்சி முன்னனி’ என்ற ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.

 

இந்நிலையில், கூட்டணி கட்சி அமைச்சர்களுக்கு முக்கியமற்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை கூட்டங்களின் போது இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகளிலும் அவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.