நாங்குநேரியை அடுத்த மறுகால் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்ணிற்கு 17 வயதே ஆவதால் இவர்களது காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை.
அதே சமயம் சிறுமியும் நம்பிராஜை பிரிய மறுத்துள்ளார். இந்நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் நெல்லை டவுன் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இவர்களது திருமணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் நம்பிராஜை சமாதானம் பேசுவதாக கூறி குறுக்குத்துறை ரயில் நிலையம் அருகே அழைத்துள்ளனர். வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நம்பிராஜ் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நம்பிராஜ் வீடு திரும்பவில்லை.
நெல்லையில் சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் தலைதுண்டித்து கொலை.